நம் நாட்டின் பசுக்களை அயல் நாட்டு கலப்பின பொலிமாட்டின் உயிரணுக்களை கொண்டு கருத்தரித்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கலப்பின பசுக்களாக உருமாறியுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கலப்பின பசுக்களின் உற்பத்தித்திறன் உயர்ந்ததன் மூலமாக பால் உற்பத்தியிலும் நம் நாடானது உயர்நிலையை அடைந்துள்ளது.
ஆனால் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான பசுவிலிருந்து கறக்கப்படும் பாலின் தரம் கேள்விக் குறியாக உள்ளது. இதற்காக பால் கறக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, மாட்டு கொட்டகை, பால் கறப்பவர், கொள்முதல் இடம் ஆகியவற்றில் சில வழிமுறைகளை பின் பற்றினாள் பாலின் தரத்தை அதிகரிக்கலாம்.
செய்ய வேண்டியவை
பால் கறக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இடத்தை சுத்தம் செய்த பிறகு ஆங்காங்கே தண்ணீர் தெளித்து விட வேண்டும், இதனால் தூசிகள் பறக்காது.
உலர் தீவனம், அடர் தீவனம், பச்சை தீவனம் போன்ற ஆரோக்கிய தீவனங்களை அளிக்க வேண்டும்.
மாட்டு கொட்டகையில் போதிய வெளிச்சம், இட வசதி, காற்றோட்டம் அமைந்திருக்க வேண்டும்.
கொட்டகையில் மழை நீர், கழிவு நீர், சாக்கடை தேங்காத வாறு நீர் செல்வதற்கான வழி அமைந்திருக்க வேண்டும்.
பால் கேன் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.
தொற்று நோய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போட வேண்டும்.
பால் வண்டி வரும் நேரத்தை பொறுத்து பால் கறக்கும் நேரம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
முதல் தர தீவனம் அளிப்பதால் பால் உற்பத்தி நன்கு கிடைக்கும்.
சரியான வீதத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
கறவை மாட்டை கோடை காலத்தில் நிழலில் கட்டுவது நல்லது.
செய்யக்கூடாதவை
பால் கறக்கும் இடத்தை சுற்றி எந்த வித துர்நாற்றமும் அடிக்க கூடாது.
அதிக ஈரப்பதமான தீவங்கள், ஊறுகாய்ப்புல் போன்றவை பால் கறக்கும் போது கொடுக்கக் கூடாது.
பால் கறந்த பின்பு கன்றை பால் ஊட்ட விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மடி நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
பூஞ்சை காளான் தாக்கிய தீவனங்களை தவிர்க்க வேண்டும்.
கறவை மாடு
பால் கறக்கும் முன் மாட்டின் கால், வாலை கட்டி வைக்கலாம்.
பால் கறந்த பிறகு தீவனம் அளிக்க வேண்டும்.
கிருமி நாசினியைக் கொண்டு பால் மடியை சுத்தம் செய்ய வேண்டும்.
வெது வெதுப்பான நீரில் பால் மடியை பால் கறப்பதற்கு முன் கழுவி தூய்மையான துணியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பால் கறந்த பிறகு பால் காம்பை அயோடின் கரைசலில் நனைக்க வேண்டும்.
நோயற்ற மாட்டை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.
கடைசியாக மடி நோய் வந்த மாட்டை கறக்க வேண்டும்.
பால் கறப்பவர்
முழுக்கை முறையில் பால் கறக்க வேண்டும்.
பால் கறக்கும் போது கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, புகை பிடிப்பது போன்ற செயல்களை பால் கறக்கும் சமயத்தில் அவசியம் தவிர்க்க வேண்டும்.
அவர் எந்த வித தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.
3 இல் இருந்து 5 நிமிடத்தில் பால் கறந்து விட வேண்டும்.
கைகளை ஈரப்பதமாக வைக்க பாலில் கைகளை விடுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது .
கைகளில் நகங்களை வைத்துக்கொண்டு பால் கறக்கக்கூடாது.
கொள்முதல் செய்யும் இடம்
பாலில் எந்த வித கலப்படமும் ஏற்பட கூடாது.
பால் மாதிரியை சரியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
கிருமி நாசினியைக் கொண்டு பால் டிரேவை (Milk tray) சுத்தப்படுத்த வேண்டும்.
பால் கேன் சுத்தமாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து பால் மாணி, பால் வடிக்கட்டியை பயன்படுத்த வேண்டும்.
LR- ஜாரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பால் வண்டி தாமதம் இன்றி உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும்.
நன்றி
இந்து தமிழ்
K.Sakthipriya
Krishi Jagran