கோவையில் புதிதாக , 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் (Government schemes)
விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன் விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இலவச மின்சாரம் (Free electricity)
இன்றியமையாதத் திட்டம் என்றால் அது இலவச மின் இணைப்புத் திட்டம்தான். ஏனெனில், எரிசக்தி துறையின், 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாய நலனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, முதலமைச்சர் அறிவித்தார்.
6,363 பேருக்கு
தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் சார்பில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் முழுவதும், 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கோவையில் தற்போது வரை, 1,235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இலக்கு எட்டப்படும் (The goal will be reached)
இதன் மூலம் விரைவில் நிர்ணயிக்கப்பட்ட அளவான 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
3 வேளாண் சட்டங்கள் ரத்து குடிரசுத் தலைவர் ஒப்புதல்- போராட்டம் என்னவாகும்?