Farm Info

Thursday, 28 April 2022 06:57 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாட்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில், கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் பல மாநிலங்களில் மின்வெட்டு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான திறன் உடைய மின் நிலையங்கள் அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடப்பு நிதி ஆண்டில் மேலும் 50 ஆயிரம் எண்ணிக்கை புதிய விவசாய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணை மின் நிலையங்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். 1,649 கோடியில் ரூபாயில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மதுவிலக்கு குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ,
தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்

தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)