Farm Info

Friday, 18 February 2022 08:47 PM , by: Elavarse Sivakumar

உத்தரப் பிரதேசத்தில் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு மின்சாரம் இலவலசமாக வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தலைமை வாக்குறுதி அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டசபைக்காக இதுவரை இரண்டுகட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. அடுத்த கட்டத் தேர்தலுக்காக பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அக்கட்சி மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளன. அதன் முடிவுகள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

அமித்ஷா

இந்நிலையில்,  திபியாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாகலந்து கொண்டு பேசினார். அப்போது, உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களுக்குப் பிறகு மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சி அழிக்கப்பட்டுவிட்டது.

இலவச மின்சாரம்

மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஹோலி பண்டிகை நாட்களில் பாஜக அரசை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். இலவச கேஸ் சிலிண்டர்கள் மார்ச் 18ம் தேதி உங்கள் வீட்டிற்கு வரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. உத்தரபிரதேசத்தில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜகவின் பெரும்பான்மை இந்த முறை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்றார்.

தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக தங்கள் வாக்குறுதிகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்கிறது. தேர்தல் அறிக்கையில் ''ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச டூ வீலர் என்று அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு பேருந்தில் இலவச பேருந்து பயணம் செய்யலாம்.

லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என‌ உத்தரபிரதேச பாஜக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

கொரோனாவிற்கு இந்தியாவில் 37 லட்சம் பேர் பலியா?

கன்றுக்குட்டியைக் கற்பளித்த இளைஞர்கள்- உச்சக்கட்ட காமவெறி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)