ஹெலிகாப்டரில் பயணம் செய்ய யாருக்குத்தான் ஆசை இருக்காது. வாய்ப்பு கிடைத்தால் அனுபவிக்க அனைவருமேத் தயார்தான். ஆனால் விவசாயிகளுக்கு ஹெலிகாப்டரில் பறந்த அனுபவத்தைத் தரும் வகையில், உல்லாசப் பயணம் திட்டத்தை இந்த மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
கர்நாடக சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். விவசாயிகளுக்கு கானல்நீராக இருக்கும் விமானப்பயணம் சாத்தியமான நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கனவு நனவானது
சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
200 விவசாயிகள்
அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்தனர். அவர்கள், 2 நாட்களும், ஹெலிகாப்டரில் இருந்தபடியே, சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர்.
2 நாட்களிலும் காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கியது. பிற்பகல் 2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்படும். சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது.
இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் கனவாக இருந்த ஹெலிகாப்டர் பயணம், இந்த விவசாயிகளுக்கு நனவானது.
மேலும் படிக்க...
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!