Farm Info

Thursday, 13 June 2024 07:35 AM , by: Muthukrishnan Murugan

KVK Training (Pic: ICAR/kvk)

திண்டுக்கல் மாவட்ட KVK , ASCI (Agriculture Skill Council of India) மற்றும் ICAR ஒருங்கிணைப்பில் இயற்கை வேளாண் உற்பத்தியாளருக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த நபர்கள் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் நடப்பு ஜூன் மாதத்தில் வேளாண் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தியாளருக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்தடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றின் முழு விவரங்கள் பின்வருமாறு-

இயற்கை வேளாண் உற்பத்தியாளர்:

இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தோடு "இயற்கை வேளாண் உற்பத்தியாளர்" பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது முற்றிலும் இலவசம். ஜூன் மாத இறுதி வாரத்தில் பயிற்சி தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இப்பயிற்சிக்கான மொத்த கால அளவு 26 நாட்கள் என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் உள்ளடக்கம்:

  • இயற்கை வேளாண்மை சாகுபடி
  • மண் வள மேலாண்மை
  • இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு
  • பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
  • அங்கக சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்
  • விற்பனை வாய்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல்
  • இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுதல்
  • செயல் விளக்கங்கள்

பயிற்சியில் பங்கேற்க யாரெல்லாம் தகுதி?

KVK சார்பில் மேற்கொள்ளப்படும் இயற்கை வேளாண் உற்பத்தியாளருக்கான பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் அவசியம். 18 முதல் 40 வயதுடையோர் மட்டுமே இப்பயிற்சிக்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவுக்கு யாரை அணுகுவது?

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பயிற்சி காலத்தில் பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பெயரை பதிவு செய்ய, மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்க்காணும் எண்ணினை தொடர்புக் கொள்ளவும். (தொடர்பு எண்: 95007 82764)

இயற்கை வேளாண் உற்பத்தியாளருக்கான பயிற்சி தவிர்த்து நடப்பு ஜூன் மாதம் விவசாயிகளுக்கான வேளாண் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைப்பெற உள்ளது. எந்தெந்த தேதியில் என்ன பயிற்சி? பயிற்சி வழங்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் யார் யார்? போன்றவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

19.06.2024:

பயிற்சி தலைப்பு: பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

பயிற்றுநர்: ஸ்ரீகுமாரி (தொழில்நுட்ப வல்லுநர்- மனையியல்)

தொடர்பு எண்: 98422 65229

25.06.2024:

பயிற்சி தலைப்பு: வேளாண் பயிர்களில் ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள்

பயிற்றுநர்: முனைவர் M.சரவணன் (தொழில்நுட்ப வல்லுநர்- உழவியல்)

தொடர்பு எண்: 97152 86401

26.06.2024:

பயிற்சி தலைப்பு:  வேளாண்காடு முறைகள்

பயிற்றுநர்: P.P.சரவணன் (தொழில்நுட்ப வல்லுநர்- வேளாண் காடுகள்)

தொடர்பு எண்: 72003 24691

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் பயிற்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்துகொள்வது அவசியம் என்பதோடு அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ( அனைத்து பயிற்சி வகுப்புகளும் வேளாண் அறிவியல் மையத்தில் நடைப்பெறும் )

Read more:

விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் இயக்க இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)