தேனி மாவட்டம் சின்னமனூரில் வரும் 22 முதல் வெற்றிலை கொடி சாகுபடி (Betel Cultivations) குறித்த இலவச பயிற்சி (Free Training)அளிக்கப்பட உள்ளது.
3 நாள் பயிற்சி (3 days Training)
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வெற்றிலைக்கொடி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து மூன்று நாள் இலவசப் பயிற்சி வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
-
டிசம்பர் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நபார்டு வங்கி மூலமாக வெற்றிலைக்கொடி சாகுபடி குறித்து இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
-
இதில் கொடிக்கால் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.
-
இப்பயிற்சியில் வெற்றிலைக்கொடி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள், உர மேலாண்மை முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கமும், செய்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது.
-
இதேபோல், மதிப்பு கூட்டும் முறைகள், சந்தைப்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.
-
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
-
விருப்பமுள்ளவர்கள் 04546 -247564 மற்றும் 96776 61410ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
திருச்சியில் மரக்கன்று விற்பனை-தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!