கோல்டன் சீதா பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.அரவிந்தன் பல்வேறு தகவல்களை கூறுகிறார்.
கோல்டன் சீதாப்பழம் (Golden Custard Apple)
மலைப் பிரதேசங்களில் விளையக்கூடிய சீதா பழங்களை பயிரிட முடிவு செய்து, கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்துள்ளேன். இது, இரண்டு ஆண்டுகளுக்கு பின் மகசூல் தரக்கூடியது. நம் ஊரின் மணல் கலந்த சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இப்பழங்களை பொறுத்த வரை, ஆகஸ்ட் மாதம் முதல் காய் பிடிப்பு தொடங்கும். தொடர்ந்து, டிசம்பர் மாதம் வரை காய்க்கும்.
ஒரு ஏக்கரில் கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்தால், நான்கு மாதங்களில் 2 டன் காய்கள் வரை அறுவடை செய்யலாம். சந்தை நிலவரத்தை பொறுத்து, கிலோ 80 முதல், 120 ரூபாய் வரை விற்கலாம். சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தால், கோல்டன் சீதா பழத்தில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும் என்று அவர் கூறினார்.
கோல்டன் சீதாப்பழத்தில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி. சமைத்த உணவை காட்டிலும் பழங்களில் நிறைவாக வைட்டமின் சி கிடைக்கும்.
தொடர்புக்கு:
டி.அரவிந்தன்
88257 46684
மேலும் படிக்க