இனிமேல் ஆன்லைன் வழியே நெல் கொள்முதல் செய்யவும் ஆன்லைனில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும் ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையின் நீரை நம்பி பாசனம் செய்யப்படுகிறது அதனால் டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் தொடர் மழை காரணமாக விவசாயிகளுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய விளைச்சலை அறுவடைக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், நிலையங்களுக்கு வெளியே கொட்டி வைத்துள்ளனர். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தங்கள் வேர்வை சிந்தி கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. தானியங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முப்போகம் ஒரு போகமாகியது கவலைக்குரிய விஷயமாகும். ஒருபோக சாகுபடிக்கே விவசாயிகள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டும். சம்பா அறுவடை தொடங்கும் டிசம்பர் மாதத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அறுவடை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு வாயிலாக விற்பது விவசாயிகளுக்கு சிறப்பானதாக இருக்கும் என அரசு எண்ணுகிறது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களை அரசு கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் தரப்பில் இருந்து அதிருப்தி நிலவுகிறது. ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து விஏஓவிடம் விவசாயிகள் கேட்பதற்கு, தங்களுக்கு அரசு உத்தரவு எதுவும் வரவில்லை என்று தெரிவித்ததாக கூறுகின்றனர்.
இதனால் என்ன செய்வது என்றே தெரியாத குழப்பத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனிடையே அவ்வப்போது மழை பெய்வதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படியே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைனில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்களை நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க