Farm Info

Tuesday, 02 November 2021 09:46 AM , by: T. Vigneshwaran

சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்,என்று தமிழக கவர்னர் ரவி பேசினார்.

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின், 42வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. தமிழக கவர்னர் ரவி, 88 பேருக்கு பட்டம் வழங்கி மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, நாம் வளர்ந்துள்ளோம் எனவும் பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு, தன்னலமற்ற விஞ்ஞானிகளே காரணம் என்றும் பேசினார்.

நாட்டின் உணவு உற்பத்தி உபரியாக இருந்தாலும், உணவு உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் ஒரு முரண்பாடான சூழ்நிலை, பல ஆண்டுகளாக, தவறான விவசாய கொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்.

வேளாண் கல்வியை பெட்ரி பேசினால், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களின் பட்டியலில், விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும் இடம் பெரும். வேளாண் பல்கலையின் பயிர் வகைகள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், பண்ணை எந்திரங்களை ஏற்றுக் கொள்வதால், விவசாய சமூகத்துக்கு ஆண்டுக்கு, ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது என்றும் கவர்னர் ரவி பேசினார்.

மத்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி துறை செயலர் திருலோச்சன் மொகபத்ரா கூறுகையில் ''உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது என்றும் மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் சொட்டு நீர் பாசன முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாறிவரும் காலநிலை, அதிகரிக்கும் வெப்பத்தால், வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளது, அதை சமாளிக்க, நவீன தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

மேலும் படிக்க:

5 சவரன் நகைக்கடன் யாருக்கெல்லாம் தள்ளுபடியாகும்- முழு விபரம் உள்ளே!

விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)