வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதன் மூலம் சாகுபடி பரப்பு மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 510 ஏக்கர் அளவில் இரண்டு ஆண்டுகளாக உள்ள தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக 50 சதவீத மானியம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ண பேரி, பூவநாதபுரம், துலக்கப்பட்டி, அனுப்பன்குளம், சின்னம்பட்டி, ஜமீன் சல்வார் பட்டி, கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமிழம் குளம், கொத்தனேரி சித்தம நாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்துக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிராமங்களில் இரண்டு வருடங்களுக்கு மேல் தரிசாக உள்ள நிலங்களில் உள்ள புதர்களை அகற்ற அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு எக்டர் பரப்பிற்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தமிழகம்: 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம்: SC தடையை மீறி அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரம்