Grafting Technique: சிறு விவசாயி மற்றும் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான நற்செய்தி வெளியாகியுள்ளது. வாரணாசியின், இந்திய காய்கறி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், ஒரே செடியில் இரண்டு காய்கறிகளை உற்பத்தி செய்ய கிராஃப்டிங் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கினை, ஒரே செடியில் வளர்த்து வெற்றியும் பெற்றுள்ளனர். இதனை பொமேடோ என பெயரிட்டுள்ளனர்.
விவசாயத் துறையில் ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விவசாயத்தின் வளர்க்கிக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து, தினமும் புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி வருகின்றனர். கிராப்டிங் என்பது அத்தகைய ஒரு நவீன நுட்பமாகும். இது பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடதக்கது. முன்பு, இந்த நுட்பம் மரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது, இந்த நுட்பம் தாவரங்கள் தொடங்கி மென்மையான காய்கறி செடிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த தொழில் நுட்பத்தின் மூலம் விளைபொருட்களை வளர்த்து வெற்றியும் கண்டுள்ளனர், விஞ்ஞானிகள். இந்த நுட்பத்தின் மூலம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி இரண்டும் ஒரே செடியிலிருந்து வளர்க்கப்படுகின்றன.
இந்த நுட்பத்தின், அதிகபட்ச பலன் சிறு விவசாயிகள் மற்றும் தோட்டம் வைத்திருக்கும் மக்களுக்கு பயனுள்ள தாக இருக்கும். இந்த கிராப்டிங் நுட்பமானது, வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் மூலம், நாட்டில் முதன்முறையாக காய்கறிகளை பயிரிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி, கத்திக்காய் மற்றும் மிளகாய் ஆகியவற்றை ஒரே நேரத்தில், ஒரே நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு Pomato மற்றும் Brimato என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய இடங்களிலோ அல்லது ஒரு செடியின் தொட்டியிலோ, இரண்டு வகையான காய்கறிகளை வளர்க்கலாம்.
மற்ற காய்கறிகளை, இவ்வாறு உற்பத்தி செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது(Research is being going to produce other vegetables, like this):
கிராஃப்டிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே செடியில் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யலாம் என வேளாண் விஞ்ஞானி சுதர்சன் குமார் மவுரியா விளக்குகிறார், மேலும் இதற்கு பொமேட்டோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதவிர அதிக தண்ணீரில் கூட வீணாகாத வகையிலான காய்கறி செடிகளை, காய்கறி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில், இவ்வைகை பயிர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளில், அதிக மகசூல் கொடுக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் கீழ், குறைந்த நீரிலும் அல்லது அதிக நீர் நிலைகளிலும் வளரக்கூடிய தக்காளி வகைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: