இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 May, 2024 3:42 PM IST
Moringa Leaf Production

முருங்கை தென்னிந்திய சமையலில் மிகமுக்கிய இடம் வகிக்கும் காய்கறிப்பயிர்களில் ஒன்றாகும். முருங்கையின் தாயகம் வடஆப்பிரிக்காவாகும். இது தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற தென்மாநிலங்களில் பல்லாண்டு பயிராகப் பரவலாகப் பயிரிடப்பட்டு வரும் காய்கறிப் பயிராகும். தற்போது ஓராண்டுபயிராக இலை உற்பத்திக்காக அடர் நடவு முறையில் பயிரிடப்படுகிறது.

இது தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மேலும் முருங்கை தென்னிந்தியாவில் பெரும்பாலும் எல்லா வீட்டுத் தோட்டங்களிலும் காணப்படும் மிக முக்கியப் பயிராகும்.

முருங்கையில் அடர்நடவு முறையில் இலை உற்பத்தி:

முருங்கை இலைகள் கீரையாகவும், மாட்டுத்தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகின்றன. இதனை அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதினால் ஒரு எக்டருக்கு மிக அதிக அளவாக 650 டன்கள் கீரை உற்பத்தி செய்யலாம். அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு நிலத்தினை 60 செ.மீ. ஆழத்தில் ரோட்டரி கலப்பை கொண்டு உழ வேண்டும்.

இதனால் அதிக வேர் வளர்ச்சி உண்டாவதோடு நீர் வடியும் தன்மையும் அதிகமாகிறது. பின்னர் 45×45 செ.மீ. இடைவெளியில் தேவையான உரங்களை அளித்து விதைக்க வேண்டும். செடிகள் சுமார் 50 செ.மீ. வளர்ந்தவுடன் இலைகளை நிலத்திலிருந்து 15 முதல் 20 செ.மீ. வெட்டிவிட வேண்டும். முதல் ஆண்டில் 20 முதல் 30 சதவிகித நாற்றுக்களுக்கு சேதம் ஏற்படும், ஆனால் பின்னர் செடிகள் அடர்த்தியாக வளரும். ஒரு வருடத்திற்கு ஒன்பது முறை அறுவடை செய்யலாம். இதனால் 650 டன்கள் இலை உற்பத்தி கிடைக்கும்.

முருங்கைக்கீரை மருத்துவ குணங்கள்:

முருங்கைக்கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான ஒன்பது அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. மேலும், முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

எனவே, முருங்கைக்கீரையை உண்ணும் போது நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். 100 கிராம் முருங்கைக் கீரையில் 6780 மி.கி கரோட்டின் சத்து உள்ளது.

இந்த கரோட்டினை தெளிந்த கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ’' சத்தாக நமது உடல் மாற்றுகிறது. சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் முருங்கைக்கீரை கண் பார்வை, எலும்பு மற்றும் இரத்தம் ஆகியவற்றிற்கும் உடல் பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை. மேலும் மனவளம் மற்றும் நினைவுத்திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. 100 கி முருங்கைக்காய், மற்றும் முருங்கைக்கீரையில் கீழக்கண்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும்- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காய்கறி அறிவியல் துறை சார்ந்த ந.ஆ.தமிழ்ச்செல்வி, சி.தங்கமணி மற்றும் மு.கவிதா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது).

Read more:

மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!

சர்க்கரைவள்ளி கிழங்கில் மகசூல் தரும் இரகங்கள் என்ன?

English Summary: Harvesting 9 times a year a Moringa Leaf Production in adar nadavu
Published on: 18 May 2024, 03:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now