தமிழகம் முழுவதும் நெல், சோளம், எள், ராகி ஆகியவற்றின் அறுவடை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிக செலவீனத்தைப் போக்க ஏதுவாக வேளாண் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டருடன் இணைந்த அறுவடை இயந்திரம் (Tractor cum Harvesting Machine) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பரவலாக சோளம், எள், ராகி, நெல் அறுவடைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூலியாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவினத்தை கணக்கில்கொண்டு, டிராக்டர் உடன் இணைந்த சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம் வேளாண்மை பொறியியல் துறையின் (Agriculture Engineering Department) விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
அறுவடைத்திறன் (Harvesting Capacity)
ஒரு நாளில் 10 முதல் 15 ஏக்கர் வரை அறுவடை செய்யும் இந்த இயந்திரம் தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் தடைகளை வெட்டி ஒருபுறமாக சீராக சாய்த்து போடுகிறது.
இதன் மூலம் சோளத்தட்டைகளை குறைந்த ஆட்களைக் கொண்டு எளிதாகக் கட்டி அடுக்கி வைக்க முடியும். இருப்பினும் சோளத்தட்டின் அடர்த்திக்கு ஏற்ப அறுவடை செய்யும் நேரம், அதிகமாகவோ, குறைவாகவே ஆக வாய்ப்பு உள்ளது.
வாடகை (Rent)
ஒரு மணி நேரத்திற்கு ரூ.340/- ரூபாய் என்ற குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
யாரை அணுகுவது (Whom to approach)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களிலும், இந்த கருவியினை முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு:
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!
கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்- அசத்தலான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்!
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!