Farm Info

Sunday, 07 November 2021 03:02 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும், அதாவது ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி (Atmospheric circulation)

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

07.11.2021

அதி கனமழை (Very heavy rain)

சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

மிக கனமழை (Very heavy rain)

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை (Heavy rain)

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

08.11.2021

மிக கனமழை (Very heavy rain)

சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

கனமழை (Heavy rain)

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல். திருப்பூர்,கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம். மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் டிஜிபி அலுவலகத்தில் 23சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் தலா 21 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

அரபிக்கடல் பகுதிகள்

07.11.2021, 08.11.2021

மத்தியக்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

07.11.2021. 08.11.2021

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரக் கடலோர பகுதிகள், வடத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

9.11.21

தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடலோரப் பகுதிகளில் சூறவாளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.11.2021 முதல் 11.11.2021

தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)