நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
11.10.21
கனமழை ( heavy rain)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மிதமான மழை (Moderate rain)
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
12.10.2021
கனமழை ( heavy rain)
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
13.10.2021, 14.10.2021
கனமழை ( heavy rain)
நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழை பதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை எதுவுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை அவசியமா?
மழைக்காலங்களில் பாம்புகளிடம் இருந்து தப்புவது எப்படி? முழு விபரம் உள்ளே!