Farm Info

Thursday, 02 December 2021 10:24 AM , by: Elavarse Sivakumar

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கின (Drowned in the flood)

அடுத்தடுத்து உருவானக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக் கொட்டித்தீர்த்தது.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.

இந்நிலையில் அந்தமானில் உருவானக் காற்றழுத்தத் தாழ்நிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
நாளை தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

கனமழை (Heavy rain)

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

புயல் நிலவரம்

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் மாறும்.
பின்னர்,வரும் 4ம் தேதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை நெருங்க வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, தென் கிழக்கு, மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு, 80 கி.மீ., வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும்.

எனவே, மீனவர்கள் இந்த நாட்களில், மேற்கண்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இந்த பகுதிகளில் உள்ளவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரெட் அலேர்ட் (Red Alert)

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளுக்கு, நாளை மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலேர்ட்டும், நாளை மறுநாள் 'ரெட் அலேர்ட்டும் விடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் புரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி துவங்கி புரி வரையிலும் துறைமுகங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)