அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் மழை
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மிக கனமழை எச்சரிக்கை(Heavy Rain)
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
8-01-21
ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் மிதமானமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச மழைபதிவு (Maximum Rain)
அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 21 சென்டிமீட்ட மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை துவம்சம் செய்யும் மண் கரைசல்!
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்