தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழ்வுப் பகுதி (Depression)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது நாளைக்கு (18-ம்தேதி) தெற்கு ஆந்திரா- வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
17.11.21
மிக கனமழை (Very Heavy rain)
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
-
ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
அதேபோல், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
18.11.2021
மிக கனமழை (Very Heavy rain)
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும் பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக்கடல் பகுதிகள்
17.11.2021-18.11.2021
-
மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!
ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!