தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மிதமான மழை (Moderate Rain)
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
16.01.21
தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
17.01.21
தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச மழைஅளவு
கடந்த 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் தலா 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
மேலும் படிக்க...
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!