Farm Info

Thursday, 11 November 2021 07:49 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 12-ம்தேதி வரை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் நவம்பர் 12-ம்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்காணும் அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

  • கேஸ் சிலிண்டர்

  • மண்ணெண்ணெய்

  • மெழுகுவர்த்தி

  • கொசுவர்த்தி

  • ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி,

  • மளிகைப் பொருள்கள்,

  • மாத்திரைகள்,

  • குழந்தைகளுக்கு தேவையான பால் பவுட்டர்,

  • நாப்கின்கள்

  • அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள்

  • பேட்டரி டார்ச்

  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

  • முதலுதவி சாதனங்கள்

என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது?

  • செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.

  • இடி மின்னல் சமயத்தில் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம்.

  • இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகில் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.

  • மழை பொழியும் சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் செல்வதைத் தவிக்கவும்.

  • தாழ்வானப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.

  • அரசு அலுவலர்கள் உங்களை வந்து அழைக்கும் பொழுது ஒத்துழைப்பு கொடுத்து அரசு நிவாரண மையங்களுக்குச் செல்வது பாதுகாப்பானது.

  • குழந்தைகளைத் தேவையின்றி வெளியே அனுப்ப வேண்டாம்.

  • தங்கள் பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் விளையாட வேண்டாம்.

  • மழை நேரங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீரைத் தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளவும்.

  • எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

  • வீடுகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் அதற்கு அருகில் அமர்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்.

  • மழை பெய்யும் நேரத்தில், மின் கம்பிகள் அறுந்துக் கிடக்க வாய்ப்பு உள்ளதால், சாலைகளில் கவனமாக நடந்து செல்லவும்.

  • வீட்டுச் சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால் மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும்.

  • சுவிட்ச் போடும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.

  • குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்கக்கூடாது.

  • வானிலை நிலவரங்களை அடிக்கடி கவனியுங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப கவனத்துடன் செயல்படுவது மிக மிக அவசியமான ஒன்று.

  • வீண் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)