தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடும் பனி (Heavy snow)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து கடும் குளிர் மற்றும் பனி நிலவி வருகிறது. வெப்பநிலையும் இயல்பை விடக் குறைவாகவே உள்ளது. காலை நேரங்களில் வாட்டி வதைக்கும் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியேச் செல்ல நேர்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வறண்ட வானிலை (Dry weather)
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.
மழை (Rain)
27, 28-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவேக் காணப்படும்.
லேசான பனிமூட்டம்
மேலும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PKVY: விவசாயிகளுக்கு ரூ.50,000 அரசு உதவி!
மாணவர் கடன் அட்டை திட்டம்: 1,36,217 மாணவர்களுக்கு 2041 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.