Farm Info

Tuesday, 29 June 2021 06:14 PM , by: Daisy Rose Mary

தக்காளி சாகுபடியில் மேற்கொள்ளவேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில்

தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு

  • தக்காளி சாகுபடியில், காய்ப்புழு மற்றும் புரொடீனியாப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்க வேண்டும்.

  • தாக்கப்பட்ட பழங்களை பறித்து, புழுக்களை அழிக்க வேண்டும்.

  • எக்காலக்ஸ் 2 மி., ஒரு லி., நீரில் அல்லது கார்பரில் நனையும் துாள் 2 கிராம், ஒரு லி., நீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • டிரைகோடர்மா என்ற ஒட்டுண்ணி முட்டையை, பூக்கும் தருணத்தில் விட வேண்டும்.

தக்காளி பயிரில், நாற்றழுகல், முன் பருவ இலைக்கருகல், புசேரியம் வாடல், பாக்டீரியம் வாடல், இலைப்புள்ளி, தேமல் நோய், இலைச்சுருட்டு நோய், உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். 

இலைச்சுருட்டை நோய் பாதிப்பு

  • தற்போது, தக்காளி செடியில் இலைகள் மஞ்சள் நிறமாகி, சுருண்டு, வளர்ச்சி குன்றி காணப்படும் இலைச்சுருட்டை நோய் பாதிப்பு ஏற்டுகிறது.

  • இலைசுருட்டு நோய் தென்பட்டால், மஞ்சள் ஒட்டுப்பொறியை பயன்படுத்தி வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

  • களைகள் கட்டுபடுத்தவும், விளை நிலங்களை சுற்றிலும் தானிய வகை பயிர்கள் பயிரிட வேண்டும்.இமிடா குளோரைடு, 0.05 சதவீதத்தை, நடவு முடிந்த 15, 25, 45வது நாட்களில் தெளித்தால், இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

  • இலைகளில் புள்ளி ஏற்பட்டு, பெரிதாகி, வளையங்கள் உண்டாகும். தண்டுகள் மற்றும் காய்களிலும் காயங்கள் ஏற்படுகின்றன.இதனை கட்டுப்படுத்த, பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.

  • மேன்கோசெம் 0.2 சதவீதம் அல்லது மேன்கோலப் உடன் மெட்டலாக்சிஸ் 0.2 சதவீதம் அல்லது குளோரோதலானில் 0.2 சதவீதம் தெளிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)