கோவை மாவட்டத்தில் காய்கறி விவசாயத்தைப் பெருக்கும் நோக்கிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், மானியத்தை அள்ளி வீசியுள்ளது தோட்டக்கலைத்துறை. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளும் அதிகமாகியுள்ளது.
தோட்டக்கலைத் துறை (Horticulture Department)
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தோட்டக் கலைத் துறை சார்பில் விசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உழவா் சந்தைகளில் காய்கறிகள் வரத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை மூலமாக தரமான வீரிய ஒட்டு ரக நடவுப்பொருள்கள் மற்றும் விதைகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவது தமிழகத்தின் பிரதான கொள்கையாகும்.
அதன்படி கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவா் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். இத்திட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் அனைத்துத் திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!