Farm Info

Tuesday, 24 December 2019 05:24 PM , by: Anitha Jegadeesan

வேப்பம் பட்டியில் உள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலில் இருந்து பயிரை எங்ஙனம் காப்பது என  மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். அதில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப் பட்டன.

படைப்புழு உருவாக்கம் மற்றும் கட்டுப்படுத்தும் முறை

  • படைப்புழுக்கள் இலையின் அடிப்பாகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகள் இட்டு புழுக்கள் வெளி வரும். அவை இலைகளில் உள்ள பச்சையத்தை உண்பதால் இலைகள் அனைத்தும் பச்சையத்தை இழந்து வெண்மை நிறமாக மாறி விடுகிறது.
  • படைப்புழுக்களின் ஆயுள் 30 நாட்கள் மட்டுமேயாகும்.
  • ஒரே பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து சுழற்சி முறையில் சாகுபடி செய்வதன் மூலம் கட்டுப்படுத்த இயலும்.
  • எக்டேருக்கு 15 இனக் கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சியை அழிக்கலாம்.
  • சூரியகாந்தி, ஆமணக்கு, எள் போன்றவற்றை வரப்பு பயிர்களாகவும், உளுந்து, தட்டைப்பயறு போன்றவற்றை ஊடுபயிராகவும் சாகுபடி செய்வதன் மூலம் கனிசமான புழுக்களை கட்டு படுத்த இயலும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)