Farm Info

Monday, 04 July 2022 12:16 PM , by: Elavarse Sivakumar

தோட்டக்கலைத்துறை மானியத்தைப் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்வதன் மூலம் எளிமையான முறையில் மானியத்தைப் பெற முடியும். 

இது தொடர்பாக கோவை தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இணையதளம் வழியாக பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும். இதற்காக பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet ஆகும்.

இணையதள பதிவு அவசியம்

இதில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். தாங்களாக பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

ஆதார் எண்
விவசாயி பெயர்
கைபேசி எண்
வீட்டு முகவரி
(இதில் மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு ஆகியவை இடம்பெற வேண்டும்)

விண்ணப்பிப்பது எப்படி?

தோட்டக்கலை மானிய விண்ணப்பத்தில் விவசாயிகள் மேற்கூறிய அனைத்து விவரங்களையும் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

திட்டம் தேர்வு

இதையடுத்து தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM), தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (NADP), நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு (RAD), ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (IHDS), தேசிய மூங்கில் இயக்கம் (NBM), தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM), தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) ஆகிய திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் உரிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் திட்ட இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு (சாகுபடி பரப்பு) ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக விவசாயி புகைப்படத்தை பதிவேற்றம் செய்து Submit செய்ய வேண்டும்.

எஸ்.எம்.எஸ்

இந்த பதிவு தொடர்பான எஸ்.எம்.எஸ் மொபைல் எண்ணிற்கு வரும்.
அடுத்த சில வாரங்களில் மானியம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)