மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2021 9:32 AM IST
Credit : haztesostenible.com

உலகெங்கிலும் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இன்றும் விவசாயம் தான் இருந்து வருகிறது. ஆனால் வேளாண்துறையில் லாபம் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக பலரும் நினைத்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நீங்கள் சரியாகச் செய்தால் விவசாயம் ஒரு இலாபகரமான வணிகமாக மாறும். உங்களிடம் சிறு பகுதி நிலவசதி இருந்தால் போதும் மிகக் குறைந்த முதலீட்டில், நீங்கள் நல்ல வருமானத்தைப் பெற முடியும். அத்தகைய சிறு முதலீடுகள் மூலம் அதிக லாபம் தரும் சிறு வேளாண் தொழில்கள் (High-profitable agricultural business ideas) குறித்து நாம் பார்போம்...

ஒருங்கிணைந்த பண்ணையம் - Integrated farming

குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் விவசாய பண்ணையைத் தொடங்கலாம். ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோப்பு பராமரிப்பு என ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து நல்ல லாபம் ஈட்டலாம்.

ஆடு மாடுகளில் இருந்து பால் விற்பனையும், கோழி மீன் வளர்ப்பில் இருந்து இறைச்சி விற்பனையும் செய்து, முட்டை விற்பனையும் என அதிகளவில் வியாபாரம் செய்யலாம். தோட்டம் தொரவுகளில் இருந்து உள்ளூர் தேவைக்கேற்ப நீங்கள் பொருட்களை தயாரித்து உள்நாட்டில் விற்கலாம். இதன் மூலம் வார வருமானம், மாத வருமானம், ஆண்டு வருமானம் என உங்களால் சம்பாதிக்கமுடியும்.

இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் விநியோகம்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் விவசாய தொழில்களில் உரம் தயாரித்தலும் ஒன்று, குறிப்பாக பெண்கள் இந்த தொழிலை வீடுகளிலேயே செய்யலாம். வீடுகளில் கிடைக்க்கூடிய வேளான் கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கலாம். இதற்கு பல பயிற்சி வகுப்புகள் வேளாண் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 

கிராமப்புறங்களில் தொடங்குவதற்கான சிறந்த விவசாய வணிகத் திட்டங்களில் உரம் விநியோகமும் ஒன்று.  சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த வணிகம் மிகவும் நல்லது. பெரிய நகரங்களிலிருந்து உரங்களை வாங்கி கிராமப்புறங்களில் விற்பனை செய்தவன் மூலம் நல்ல லாபம் பெறலாம். 

காட்டாமணக்கு விவசாயம் - Jatropha farming

பயோடீசலை உற்பத்தி செய்வதற்காக, காட்டாமணக்கு ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது, ​​காட்டாமணக்கு விவசாயம் மிகவும் பிரபலமான சிறு விவசாய வணிகத் திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது பற்றி மிகச் சிலரே அறிவார்கள். காட்டாமணக்கு பயிரின் சிறந்த விஷயம் என்னவென்றால், ஏழை மண், தரிசு நிலங்கள், குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சி பகுதிகள் உட்பட பரந்த அளவிலான மண்ணில் இதை வளர்க்க முடியும். இது குறித்து சிறிய ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த விவசாயத் தொழிலை நீங்கள் எளிதாகத் தொடங்கலாம்.

மசாலா பொருட்கள் தயாரிப்பு - Spice processing

இயற்கையாக விளைவிக்கப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தைகளில் அதிக தேவை உள்ளது. இதற்கு கூடுதல் முதலீடும் தேவை இல்லை. தரமான பேக்கிங் மற்றும் தயாரிப்பு முறைகளால் நல்ல லாபம் பெற முடியும். சீரகம், மிளகு போன்ற சந்தையில் அதிகம் தேவைப்படும் மசாலாப் பொருள்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

உலர்ந்த மலர்கள் விற்பனை (Dry Flower Business)

மலர்கள் விரைவில் கெடும் பொருளாக இருப்பதால், இவற்றை நீண்ட நாட்கள் சாதாரண நிலையில் வைத்திருக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது மலர்களை உலர்த்தி மதிப்பு கூட்டு செய்து அவை உலர் மலர்களாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மலர்கள் நன்கு உலர்த்தி பின்னர் அவற்றிற்குத் தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக்கி, நீண்ட காலத்திற்கு அழகு குறையாமல் சேமித்து வைக்க இயலும். உலர்த்தப்பட்ட மலர்கள் அதன் இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றை கொண்டு சென்டு வளையம், வாழ்த்து மடல், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை சிறிய அளவில் குடிசைத் தொழிலாகவோ அல்லது தொழிற்சாலை தொழிலாகவோ செய்யலாம்.

மேலும் படிக்க...

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

லட்சத்தில் சம்பாதிக்க.... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கோழி வளர்ப்பு!!

English Summary: How to earn more money in less investment, here are the High Profit Farming business Ideas
Published on: 04 December 2020, 05:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now