வாழை மரத்தின் அடியில் ஏற்படும் வெடிப்பைச் சமாளிக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
வாழையின் அடிப்படைப்பகுதியில் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய கரணம் என்னவென்றால், அது வெப்ப நிலை மாற்றம்தான். எங்கே அல்லது எந்த பகுதியில் அதிகமாக வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வாழையின் அடிப்பகுதி வெடிக்கும்.
வெப்பத்தால் பாதிப்பு (Heat damage)
இப்படி அடியில் வெடிப்பது பாக்கு மரம், வாழை மற்றும் மென்மையான அடிப்பகுதி கொண்ட மரங்களில் அடிப்பகுதியில் ஏற்படும். அதாவது மதிய வேளையில் பகல்1 மணி முதல் மாலை 4 மணிவரை வெயில் கடுமையாக இருக்கும்.
பூஞ்சைத் தொற்று (Fungal infections)
அந்த நேரத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், வாழையின் அடிப்பகுதி முதலில் கிழியும். கிழிந்த இடத்தில் பூஞ்சைத் தொற்று உண்டாகி வெடிப்பு பெரிதாகும்.இதனைக் கட்டுப்படுத்த இலைகள் பெருகுகிற மாதிரியான அமைப்பில் நாம் வளர்த்திருக்க வேண்டும்.
ஊடுபயிர் (Intercropping)
தரையில் ஊடு பயிர் போடலாம். இதை உடனடியாக செய்யமுடியாது. எனவே முதலில் தண்ணீர் அதிகம் இருக்கிற மாதிரி கொடுக்கவேண்டும்.
பூஞ்சாணக் கொல்லிகள் (Fungicides)
சூடோமோனஸ் , விரிடி , பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து வெடிப்பு வந்த இடத்தில் தெளிக்கலாம்.
சத்து குறைபாடு (Malnutrition)
இதைத் தவிர்த்து வாழையில் சுண்ணாம்புச் சத்து அல்லது சாம்பல் சத்துக் குறைவாக இருந்தால் கூட மரத்தின் வலிமை, குறைந்து வெடிப்பு வரலாம்.
சுண்ணாம்புக் கலவை (Lime compound)
இதற்கு வாழையை நடுவதற்கு முன்பே மண் பரிசோதனை செய்வது அவசியம். அதேநேரத்தில், 200 லிட்டர் நீரில் 3 கிலோ அளவுக்கு சுவற்றில் அடிக்கும் சுண்ணாம்பைக் கலந்து அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து அந்த தண்ணீரைப் பாசனம் செய்யும் போது எல்லா பயிர்களுக்கும் ஊற்றிவிடலாம்.
சாம்பல் சத்து (Ash nutrient)
வாழையை நட்ட 5-வது மாதத்திலிருந்து ஒவ்வொரு மரத்திற்கும் இரண்டு கை அள்ளும் அளவிற்கு சாம்பலைக் கொடுப்பது நல்லது.
கவனம் தேவை (Needs attention)
இவ்வாறு செய்வதால் வாழைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நோயைத் தங்கும் சக்தியும் கிடைக்கும். இதனால் வாழையின் அடிப்பகுதி வெடிப்பது நீங்கும்.
எனவே இந்த விஷயங்களில் விவசாயிகள் கவனம் செலுத்தினால், வாழையில் அடிப்பகுதி வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க...
உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!