நெற்பயிர்களைத் தாக்கும் பழ நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் சந்திரசேகரன் (Chandrasekaran) விளக்கியுள்ளார். பழ நோய்த் தாக்குதலால் மகசூல் குறைந்து விடும். இந்நோய்த் தாக்குதலை உடனடியாக கண்டறிந்து அதனைப் போக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டும்.
பழ நோய் பரவும் முறை:
அதிக மழை, காற்றில் ஈரப்பதம், பனிப்பொழிவான காலத்தில் நெற்பயிர்களில் பழநோய் தாக்குதல் காணப்படுகிறது. இது 'அஸ்டிலா ஜூனாய்டியா (Astila zoonoidia)' என்ற பூஞ்சாணத்தால் உருவாகிறது. இந்த பூஞ்சாணம் நெற்கதிரின் ஒரு சில நெல்மணிகளில் காணப்படும். இவை நிறம் மாறி பந்து போல சுருண்டு வளரும். நெல் மணிகள் முதிரும் போது கரும்பச்சையாக மாறிவிடும். வேகமாக பரவும் இந்நோயால் மகசூல் இழப்பு (Yield loss) ஏற்படுகிறது. இவை பூக்கும் பருவத்திலேயே நெற்பயிர்களை தாக்குகிறது. மண்ணில் அதிகமாக காணப்படும் தழைச்சத்து மற்றும் காற்றால் மற்ற வயல்களுக்கும் பரவுகிறது. பின்பட்ட பருவ பயிர்களில் இந்நோயின் பாதிப்பு குறைவு.
தடுப்பு முறை:
பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கண்டவுடன் அழித்து விடவேண்டும். இல்லாவிட்டால் மற்ற பயிர்கள், வயல்களுக்கும் பரவிவிடும். நோயின் தாக்கத்தை குறைக்க தழைச்சத்து உரத்தை (Nutrient fertilizer) பிரித்து 15 நாட்கள் இடைவெளியில் இட வேண்டும். ஒரு எக்டேர் பரப்புக்கு பிராப்பிகனாசோல் (Propiconazole) 500 மில்லி மருந்தை தெளிக்கவேண்டும். அல்லது ஒன்றே கால் கிலோ காப்பர் ஹைட்ராக்சைடு (Copper hydroxide) பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பயிர்களை அறுவடைக்கு (Harvest) முன் பிரித்து அழிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் (Carbendazim) பூஞ்சாணக் கொல்லியை கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். அதிக பாதிப்பு இருந்தால் பின்பட்ட நடவு செய்யக்கூடாது. பயிர்கள் ஈரமாக இருக்கும் போது உரமிடுவது, களையெடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை,
94435 70289
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வனத்துக்குள் திருப்பூர் திட்டம்! தன்னார்வ அமைப்புகளின் சாதனை!