உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்குவதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், ரூ.45 லட்சம் வரை மானியமும் பெறமுடியும் என வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் திட்டம்
சிறு விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயத்தை லாபகரமாக முன்னெடுக்கும் வகையிலும், மத்திய அரசு, உழவர் உற்பத்தி நிறுவன திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
கோவை, வேளாண் பல்கலைக்கழக, இணையதள தகவலின்படி, தமிழகத்தில் 58 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய சேர்மன் கவிதா தலைமை வகித்தார்.கூட்டத்தில் மாநில இளம் வல்லுநர் நசீர் பேசியதாவது:
ரூ.30 லட்சம் (Rs.30 lakh)
உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க, குறைந்தது 300 நபர்களை சேர்க்க வேண்டும். அதிகபட்சம் 1,500 நபர்கள் வரை சேர்க்கலாம்.உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கினால் மானியமாக, :30 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இத்தொகையை வைத்து, வேளாண் கருவிகளை வாங்கி உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு, குறைந்த வாடகையில் பயன்படுத்த அனுமதிக்கலாம்.
விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கலாம்.
ரூ.15 லட்சம் வரை (Up to Rs 15.lakh)
உரம், பூச்சி மருந்து, விதை ஆகியவற்றுக்கான ஏஜென்சி பெறலாம்.மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடந்தால், கூடுதலாக 15 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் உறுப்பினராவதன் வாயிலாக, கூடுதல் வருமானம் பெறலாம்.
விலை குறைவு (Cheap)
விளை பொருட்களுக்கு கூடுதல் விலை பெற முடியும். குறைந்த விலையில் இடு பொருட்களையும் வாங்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
திட்ட செயல் அலுவலர் கவிதா, உற்பத்தியாளர் நிறுவனம் துவங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார். வட்டார அணித்தலைவர் கோகுல், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
ஒரு லிட்டர் பெட்ரோலில் 102 km வரை செல்ல கூடிய 3 சூப்பர் பைக்குகள்