விவசாயிகளுக்கு இடி மாதிரியான செய்தியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை, மின் நுகர்வோர் எண்ணுட இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மட்டுமல்லாது நுகர்வோருக்கு, புதிய கெடுபிடியை உருவாக்கியுள்ளது.
நிலைப்பாடு
ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என நீதிமன்றங்கள் எத்தனை முறை தீர்ப்பு வழங்கினாலும், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவோர், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது.
தேசிய அடையாளம்
இதற்காக, வங்கிக் கணக்கு முதல் பான் அட்டை வரை, ஏன், வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, ஆதார் நம்முடைய தேசிய அடையாளமாக மாறி வருகிறது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கட்டாய அஸ்திரமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது இலவச மின்சாரத்தைப் பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இணைப்பு தொடக்கம்
இலவசம் மற்றும் மானிய திட்டங்களின் கீழ் வரும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
100 யூனிட்
தமிழக மின் வாரியம், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதுதவிர, விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்குகிறது.
ரத்தாகும் ஆபத்து
இலவச மற்றும் மின்சாரத்தில் முறைகேட்டைத் தடுக்க, மின் நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் மின்வாரியம், நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அரசின் இந்நடவடிக்கையை உணர்ந்துகொண்டு, விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், இலவச மின்சாரம் கிடைக்காமல் போகும் ஆபத்தும் உள்ளது.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!