Farm Info

Tuesday, 16 January 2024 02:32 PM , by: Muthukrishnan Murugan

panchayat mausam seva

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நிறுவப்பட்டு 150-வது ஆண்டு நிறுவன நாளினை கொண்டாடும் வகையில் திங்கள்கிழமையான நேற்று டெல்லியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வானிலை முன்னறிவிப்புக்கான ”பஞ்சாயத் மெளசம் சேவா ஃபார் விவசாயிகள்”  (panchayat mausam seva for farmers) என்கிற போர்ட்டலை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை, 1875 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் முதல் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும், வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் முதன்மை அரசு நிறுவனமாகவும் அமைக்கப்பட்டது. மக்களுக்கான வானிலை சேவையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இந்திய வானிலை துறை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி 150 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

150-வது ஆண்டு நிறுவன நாள்:

இதன் ஒரு பகுதியாக ஜனவரி 15 ஆம் தேதி (நேற்று) புது தில்லி விஞ்ஞான் பவனில் தேசிய அளவிலான நிறுவன நாள் நிகழ்வு நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக துணை குடியரசுத் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்வில் ஒருபகுதியாக விவசாயிகளின் நலனுக்காக, (panchayat mausam seva for farmers) என்கிற போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகள் பஞ்சாயத்து வாரியாக வானிலை எச்சரிக்கை விவரங்களை அறிந்துக்கொள்வதோடு, அதற்கேற்ப விவசாய நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளதாக IMD சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்டல் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

IMD, புவி அறிவியல் அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் பசுமை அலர்ட்ஸ், மெளசம் சேவா ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கான பஞ்சாயத்து மௌசம் சேவா போர்ட்டலை உருவாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்சேதம் தவிர்க்கலாம்: IMD நம்பிக்கை

வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்றவாறு விதைப்பு, நாற்று நடுதல், நீர்ப்பாசனம், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற அனைத்து விதமான விவசாய நடவடிக்கைகளை விவசாயிகளை திட்டமிடுவதற்கு உதவும் வகையிலும், ஒரு வாரக்காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பும் இந்த போர்டலில் தகவல்களாக வழங்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் உள்ளீடு செலவு குறைவதோடு, பயிர் சேதத்தையும் தடுக்க இயலும் என IMD சார்பில் நம்பிக்கையோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(https://www.greenalerts.in/) என்கிற இணையதளம் வாயிலாக பஞ்சாயத்து வாரியான வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுக்கான வானிலை தொடர்பான ஆலோசனைகளை நீங்கள் அறியலாம்.

GIS அடிப்படையிலான மௌசம் செயலி: முன்னறிவிப்பு, மழைப்பொழிவு, ஈரப்பதம், சூரிய உதயம்/சூரியன் அஸ்தமனம், சந்திர உதயம்/மறைவு, மழை போன்ற வானிலை தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த ஜிஐஎஸ் (GIS) அடிப்படையிலான "மௌசம்" என்கிற மொபைல் செயலியையும் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனவரி 15, 2024 முதல் ஜனவரி 15, 2025 வரையிலான ஒரு வருடத்தில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் 150 ஆண்டுக்கால சேவை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் IMD சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read also:

சோலார் மாவு மில் தயாரிப்புக்கு காப்புரிமை- அசத்தும் சக்தி பம்ப்ஸ்

ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)