பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 August, 2022 2:32 PM IST
Coconut Trees

இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு (Insurance)

இது குறித்து சுல்தான் பேட்டை வேளாண் துறை அதிகாரிகள் கூறியது, தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் 60 ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை காப்பீடு செய்யலாம்.

ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு ரூ.2.25 -ம், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.3.50-ம் தவணை தொகையாக செலுத்த வேண்டும்.

அதனைத்தொடர்ந்து தவணை தொகைக்கான வரைவோலையை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் -சென்னை என்ற பெயரில் எடுக்க வேண்டும். 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டு தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.900 மற்றும் 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு தலா ரூ.1,750 வழங்கப்படும்.

காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவத்துடன் ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயிகளின் புகைப்படம் மற்றும் சுய அறிவிப்பு கடிதம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனரின் காப்பீட்டு திட்டத்திற்கான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பல்வேறு விவசாய பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

உயரப் போகுது டோல் கட்டணம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

English Summary: Important announcement for farmers! Insure these crops!
Published on: 25 August 2022, 02:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now