பிஎம் கிசான் திட்டத்தின் அப்டேட்டை மொபைல் மூலம் பயனாளிகள் தெரிந்துகொள்ளும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த இந்த வசதி, நடைமுறைச் சிக்கல் காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
PM-kisan
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த
2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை அரசு விரைந்து வழங்கி வருகிறது.
தகுதி
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்.
12-வது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.அதாவது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வரும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மொபைல் வசதி
இந்நிலையில் மொபைல் நம்பரை வைத்து பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளி நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
எத்தனை தவணை பணம் வந்துள்ளது, எவ்வளவு வந்துள்ளது, அடுத்த தவணை குறித்த தகவல் போன்ற பல்வேறு விவரங்களை விவசாயிகள் தங்களது மொபைல் நம்பர் மற்றும் ஆதார் நம்பரைப் பதிவிட்டு பார்க்கும் வசதி முதலில் இருந்தது. அதன் பின்னர் மொபைல் நம்பரை வைத்துப் பார்க்கும் வசதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வசதி தொடங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பதிவு செய்ய
பிஎம் கிசான் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். இதில் பதிவு செய்வது சுலபமான விஷயம்தான். விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம். பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் கட்டாயம்
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது. இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!