மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 October, 2020 5:26 PM IST
Credit : Dinamalar

விவசாயத்திற்கு பெரிதும் உதவி வருபவை, கால்நடைகள் (Livestock). அந்த வகையில், கறவை மாடுகள் (Dairy cows) பால் உற்பத்தியில், பெரும்பங்காற்றி வருகிறது.
கால்நடைகளை வளர்ப்பவர்களும், வளர்க்க ஆசைப்படுபவர்களும் பால் உற்பத்தியை அதிகரிக்கவே விரும்புவார்கள். முன்பெல்லாம், அதிக எண்ணிக்கையில் அதிகமானோர் பசுக்களை, வளர்த்து வந்தனர். ஆனால், தற்போது, பசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கெல்லாம், முக்கிய காரணம், செலவு அதிகரித்தும், பால் உற்பத்தி குறைந்தும் இருப்பதே ஆகும். கறவை மாடுகளில், பால் உற்பத்தியை (Milk production) அதிகரிக்கும் சில வழிமுறைகளையும், செய்யக்கூடாத செயல்கள் பற்றியும், இங்கு அறிந்து கொள்ளலாம்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள்:

கன்று ஈன்ற பின், சோயா, மொச்சைக் கொட்டை மற்றும் பருத்திக் கொட்டை கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். தீவனத்தை இரண்டு வேளை தருவதற்கு பதிலாக, நான்கு வேளையாக பிரித்துக் கொடுக்க வேண்டும். கன்று ஈன்ற பிறகு 85 நாட்கள் கழித்து, கறவை மாட்டுக்கு, சினை ஊசி (Chin injection) போடவேண்டும். மாடு சினையானால் பால் உற்பத்தி பாதிக்கப்படும். ஒரு லிட்டர் பால் உற்பத்தியாவதற்கு, 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு, 30 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எனவே சுத்தமான குடிநீரை குறையில்லாமல், கொடுக்க வேண்டும். மேலும், மக்காச்சோளம் மற்றும் சோளம் கலந்த உணவுகளை அடிக்கடி தர வேண்டும்.

Credit : Hindu Tamil

செய்யக்கூடாத செயல்கள்:

தேவைக்கு அதிகமான புரதச் சத்துள்ள தீவனங்களை (Feeds) கொடுத்தால், மாட்டின் வயிற்றில் அமோனியா (Ammonia) வாயு உற்பத்தியாகும். இந்த அமோனியா ரத்தத்தில் கலந்து, கருப்பையில் கசியும். இதனால் சினையும் பாதிக்கப்படும். கறவை மாடுகளுக்கு அளவுக்கு அதிகமான தானியங்களையும், புளித்த தண்ணீரும் கொடுத்தால் அமிலநோய் ஏற்படும். இதனால் பால் உற்பத்தியும், கொழுப்புச்சத்தும் குறையும். பால் கறக்கும் போது மாடுகளை அடித்தாலோ, துன்புறுத்தினாலோ, அட்ரினலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரந்து பாலின் உற்பத்தியை குறைத்து விடும்.

பசுந்தீவனம்:

இளம்பயிர்களை உணவாக கொடுத்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும். முற்றிய பயிர்களில் ஆக்சலேட் சத்து அதிகமாக இருக்கும். இதை உணவாக சாப்பிடும் போது கால்சியம் (Calcium) சத்து உடலுக்கு கிடைக்காமல், கால்சியம் ஆக்சலேட் (Oxalate) ஆக, சாணத்துடன் வெளியேறும். எனவே பசுந்தீவனங்களை (Green fodder) 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து தீவனமாக தரவேண்டும். பசுந்தீவனம், பால் உற்பத்தியை சீரான அளவில் அதிகரிக்க வல்லது. பால் உற்பத்தியை அதிகரித்து விட்டால், நிச்சயம் நல்ல இலாபம் கிடைக்கும். கறவை மாடுகளை, கனிவோடு பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:

திரு. ராஜேந்திரன்
இணை இயக்குனர் (ஓய்வு),
கால்நடை துறை, திண்டுக்கல்.
94864 69044.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்! மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை!

குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: ரூபாய் 1200 மானியம்!

English Summary: In dairy cows, some tricks to increase milk production!
Published on: 20 October 2020, 05:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now