Farm Info

Friday, 25 September 2020 06:11 PM , by: Elavarse Sivakumar

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஊக்கத்தொகை (Incentives)

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தோட்டக்கலைத் துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்தாண்டு அறிமுகமாகி உள்ளது. இதில் கத்தரி, வெண்டை, தக்காளி மற்றும் பந்தல் காய்கறிகள் ஆகியன சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500 வழங்கப்படும்.

இதேபோல், பல வகையான காய்கறி விதைகள் (Vegetable Seeds) ரூ.15க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பட்டா, சிட்டா, வி.ஏ.ஓ., அடங்கல், போட்டோ, விதை வாங்கியதற்கான ரசீது (Bill) , வயல் போட்டோ  (Photo) ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம் என திருப்புல்லாணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சுகன்யா அறிவுறுத்தியுள்ளார்.

திருச்செங்கோடு

இதனிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தில், பருவம் இல்லாத காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறை சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500ம், தக்காளி, கத்தரி வெண்டை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வீட்டுத் தோட்டத்தில் அதிக மகசூல் பெற எளிய யுக்திகள்!

இயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)