Farm Info

Wednesday, 30 September 2020 04:52 PM

திண்டுக்கல்லில் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

  • தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

  • இதேபோல் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.2,500மும், காய்கனி பயிர்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

  • இது தவிர அங்கக சான்று பெறுவதற்கும் ரூ.500 மானியம்

  • அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படும்.

  • இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ விண்ணப்பிக்கலாம்.

  • ஊக்கத் தொகை பெற விரும்புபவர்கள், சம்மந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கனி சாகுபடி செய்த பரப்பு விவரங்கள் சிட்டா, அடங்கல், வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்ததந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கலாம்.

  • உழவன் செயலி மற்றும் இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யலாம்.

  • மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
பெருமாள்சாமி
துணை இயக்குநர்
தோட்டக் கலைத் துறை
திண்டுக்கல் மாவட்டம்

மேலும் படிக்க...

மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!

அதிக மகசூல் பெறத் துத்தநாகச் சத்து அவசியம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)