Farm Info

Friday, 24 July 2020 07:27 PM , by: Daisy Rose Mary

iamge credit : Bharathi organic food

முருங்கையில் நாட்டு முருங்கை, செடி முருங்கை என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டுமே தமிழகத்தில் பயிரிடப்படுகிறது. ஜூன் - ஜூலை, நவம்பர் - டிசம்வர் இவைகளுக்கு ஏற்ற பருவமாக கருதப்படுகிறது. செடிமுருங்கையின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள் வரை இருக்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும், எனவே சரியான பருவத்தில் அறுவடை செய்வது அவசியம்

முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள் (Pests of Moringa)

மொக்குப்புழு : நூர்டா மொரிங்கே - (Bud worm: Noorda moringae)

தாக்குதலின் அறிகுறிகள்

பூ மொட்டுககளை புழுக்கள் துளையிட்டு சாப்பிடும், தாக்கப்பட்ட பூ மற்றும் மொட்டுகள் உதிர்ந்து விடுகின்றன

பூச்சியின் விபரம்

  • முட்டை: வெண்ணிற நீள்வட்ட முட்டைகளை மொக்குகளில் தனியே இடும்.

  • புழு: புழுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை மற்றும் முன்மார்பு உறை கருப்பு நிறத்தில் இருக்கும்

  • கூட்டுப்புழு: மண் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவம் மேற்கொள்ளும்

  • பூச்சி முன்இறக்கைகள் : பழுப்பு நிறத்தில் இருக்கும்.

  • பின்இறக்கைகள் : வெண்ணிறத்திலும் அதன் ஓரங்களில் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்படுத்தம் முறை

  • உதிர்ந்த பூ மற்றும் மொட்டுகளைப் பொறுக்கி அழித்தல்

  • ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளிக்க வேண்டும்

இலைப்புழு : நூர்டா பிளைட்டியாவிஸ் - (Leaf caterpillar: Noorda blitealis)

தாக்குதலின் அறிகுறிகள்

புழுக்கள் இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் சல்லடை போன்று காணப்படும்.

பூச்சியின் விபரம்

  • முட்டை: வெண்ணிற நீள்வட்ட வடிவ முட்டை குவியல்கள் இலைகளில் இருக்கும்

  • புழு: புழுக்களில் முன்மார்பு உறை இல்லாமல் இருக்கும்
  • பூச்சி: மொக்குப்புழுவை போன்றே இருக்கும் ஆனால் சற்று பெரியது

கட்டுப்படுத்தும் முறை

  • மரத்தை சுற்றி உழவுசெய்து மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிகொணர்ந்து அழிக்க வேண்டும்

  • பூ மொக்குகளைப் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்

  • விளக்குப்பொறி ஹெக்டேருக்கு ஒன்று அமைக்கவும்

  • கார்பரில் 50 WP 1 கிராம்/லிட்டர் அல்லது மாலத்தியான் 50 EC 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்

 

கம்பளிப்புழு : யூட்டிரோட் மெல்லிஃபெரா - (Hairy caterpillar Eupterote mollifera)

தாக்குதலின் அறிகுறிகள்

  • மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும்

  • புழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும்

  • மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பற்களால் சுரண்டு சாப்பிடும்

  • தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • முட்டை: இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும்

  • புழு: புமுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் இருக்கும்

  • பூச்சி: மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

  • முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்

  • மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்

  • தீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை அழிக்க வேண்டும்

  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்

காய் ஈ: ஜிட்டேர்னா டைஸ்டிக்மா - (Pod fly: Gitona distigma)

தாக்குதலின் அறிகுறிகள்

  • காய்கள் காய்த்தும், மற்றும் பிளந்தும் காணப்படும்

  • காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடியும்.

பூச்சியின் விபரம்

  • முட்டை: சுருட்டு வடிவ முட்டைகளை குழுக்களாக இளம் காய்களில் இடும்.

  • புழு: வெண்ணிற ஈ புழுக்கள்

  • ஈ: மஞ்சள் நிறத்தில் இருக்கும், கண்கள் செந்நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

  • தாக்கப்பட்ட மற்றும் காய்ந்து விழுந்த காய்களை சேகரித்து அழிக்கவும்

  • இப்பூச்சினை ஈக்கும்பொருட்களாக சிட்ரோனல்லா எண்ணெய், நீலகிரிமர எண்ணெய், வினிகர் (அசிட்டிக் அமிலம்), டெக்ஸ்ட்ரோஸ் அல்லது லாக்டிக் அமிலத்தை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

  • மரங்களைச் சுற்றியுள்ள நிலத்தை உழுது அல்லது பிளந்து மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களை கொன்று தாய் ஈ உருவாவதைத் தவிர்க்கலாம்

  • நிம்பிசிட்ன் 3மி.லி லிட்டர், 50 சதம் காய் உருவான பிறகு மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்

மரப்பட்டை துளைப்பான் : இன்டார்பெலா டெட்ராயோனிஸ் - (Bark caterpillar: Indarbela tetraonis)

தாக்குதலின் அறிகுறிகள்

  • மரச்சக்கைகளும், புழுவின் சிறுசிறு-உருண்டையாக காணப்படும், கழிவுப்பொருட்களும் கொண்ட வல்லிய நூலாம்படை மரப்பட்டையின் மீது வளைந்தும் நீளமாகவும் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • புழு: நீளமாகவும், அழுக்கான பழுப்பு நிறத்துடனும், கருமையான தலையுடன் இருக்கும்.

  • பூச்சி: வெளிர் பழுப்பு நிறத்துடன் இருக்கும். முன்இறக்கைகள் பழுப்பு நிறப்புள்ளிகளையும், வளர்ந்த கோடுகளையும் கொண்டிருக்கும். பின்இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • பட்டையிலுள்ள நூலாம்பட்டையை சுத்தம் செய்து விட்டு ஃபார்மலின் அல்லது குளோர்ஃபார்ம் அல்லது பெட்ரோல் நனைத்த பஞ்சை கொண்டு பட்டையில் உள்ள துளையை அடைக்கவும் அல்லது சேறு கொண்டு அடைக்கவும்

மேலும் படிக்க 

நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

பெண்களே தொழில் தொடங்க விருப்பமா? - ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அள்ளித்தரும் அற்புதமான ஐந்து திட்டங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)