Farm Info

Friday, 04 June 2021 11:23 AM , by: Elavarse Sivakumar

Credit : News first

தொடர்ந்து பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஏதுவாக, நீலகிரி மாவட்டத்தில் தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளை 14 நாட்கள் மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை (District Administration Action)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொற்றுப்பரவல்  அதிகரிப்பு (Increase in infection)

இதற்கிடையில், கிராமப்புற மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொற்றுப் பரவல் அதிகரித்தது.

விடுமுறை அளிப்பு (Holiday)

கூடலூர் பகுதியில் இதுவரை 51 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒருபகுதியாக கூடலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்குக் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்குத் தகவல் (Information to authorities)

மேலும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக மட்டுமின்றி தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருவதாகவும், இதன் காரணமாகக் கொரோனாப் பரவல் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

திடீர் ஆய்வு (Sudden Inspection)

இதன் அடிப்படையில், கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் தேயிலை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது கூடலூர் இரண்டாம் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தொழிற்சாலையை 14 நாட்கள் மூட நிர்வாகத்தினருக்கு ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அத்துமீறியத் தொழிற்சாலைகள் (Excessive factories)

இதேபோல் பல இடங்களில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் பெயர் விவரங்களைச் சேகரித்தனர். இதில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தெரியவந்தது.

14 நாட்கள் மூட உத்தரவு (Ordered to close for 14 days)

இதைத்தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து 14 நாட்கள் தொழிற்சாலைகளை மூடும் படி அதன் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதேபோல பந்தலூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க...

கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)