திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
வட்டியில்லா கடன் (Loan with no interest)
திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேசன் கார்டு நகல், நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால், திருச்சி மண்டல இணை பதிவாளரை 73387 49300, திருச்சி சரக துணை பதிவாளரை 73387 49302, லால்குடி சரக துணைப் பதிவாளரை 73387 49303, முசிறி சரக துணைப் பதிவாளரை 73387 49304 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் சிவராஜ் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க