Farm Info

Tuesday, 19 July 2022 10:44 AM , by: Elavarse Sivakumar

ஈரோட்டில் உள்ள Myrada வேளாண் அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியேத் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டியதுக் கட்டாயம். அவ்வாறு முன்பதிவு செய்வதற்கு ஜூலை 24ம் தேதி வரை காலக்கெடுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் Myrada வேளாண் அறிவியல் நிலையம், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வேளாண்மை மீது விருப்பம் உள்ளவர்களை தொழில் முனைவோராக மாற்ற முன்வந்துள்ளது. இதற்காக காளான் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பயிற்சி முகாம்

ஜூலை 26 மற்றும் 27ம் தேதிகளில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படு கிறது. இதில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி முகாமில், உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். காளான் வளர்ப்பு மற்றும், காளான் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு, அதனை சந்தைப்படுத்துதல் பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

கட்டணம்

காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாம் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்கூட்டியேத் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டியதுக் கட்டாயம்.

கால அவகாசம்

அவ்வாறு முன்பதிவு செய்வதற்கு ஜூலை 27ம் தேதி வரை காலக்கெடுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் வரும்27ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)