மஸ்கான் 2021, சர்வதேச காளான் திருவிழா(MUSHCON Mushroom festival) இந்தியாவின் தனித்துவமான பண்டிகையாக உத்தரகாண்ட்(Uttrakhand) மாநிலம் ஹரித்வாரில்(Haridwar) கொண்டாடப்படுகிறது, உத்தரகாண்ட், இந்தியாவின் பண்டைய மற்றும் தேவஸ்தலமாகும், இந்த விழா அக்டோபர் 18 முதல் 20 வரை நடைபெறும். இந்த பண்டிகையின் போது, காளான்களை ஒரு உணவாக விரிவாக விவாதிக்கப்படும்.
சமையல் மற்றும் மருந்து(Medicine) ஆகவும் காளான் உபயோகிக்கப்படும் என்பதும் விவாதிக்கப்படும். இந்த விழாவை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம், காளான்கள் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும் மற்றும் உத்தரகாண்டில் காளானின் விநியோகச் சங்கிலியை வளர்ப்பதற்கான ஆர்வத்தை உருவாக்குவது ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் காட்டு காளான்கள் மற்றும் செடிகளை உண்ணுதல். காளான் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் தங்கள் அறிவை வழங்க குறிப்பிடத்தக்க பேச்சாளர்களை விழா அழைத்துள்ளது.
பங்கேற்பாளர்கள் பலவகையான காளான்கள்(Mushroom) மற்றும் காட்டு உணவுகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை கற்பிப்பார்கள், இதில் சில குறிப்பிடத்தக்க காளான் வகைகள் பிரத்யேகமானவை, இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வில் ஊறுகாய், உலர்ந்த காளான்கள் ஆகிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காளான் ஏன் சாப்பிட வேண்டும் என்பதை விளக்கும் மூன்று நாட்களும் நாள் முழுவதும் அரங்கத்தில் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் காட்சி இருக்கும். மாண்புமிகு வேளாண் அமைச்சர்(Agriculture Minister) மற்றும் விவசாயிகள் நலன் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் கீழ் "ஆஜாதி கா அமிர்த மஹோத்ஸவ்" அதாவது சுதந்திரத்தின் அமிர்த உத்சவம் கொண்டாடுவதற்காக, ஸ்ரீ சுபோத் யுனியல், தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்தும் துறை, உத்தரகாண்ட் அரசு, ரிஷிகுல்(rishikul) ராஜ்கியா ஆயுர்வேத மகாவித்யாவில் "சர்வதேச காளான் திருவிழாவை" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர், விவசாயிகளுக்காக பணிபுரியும் பத்திரிக்கை நிறுவனமான க்ரிஷி ஜாக்ரன் குழுவும் இந்த விழாவில் கலந்துகொண்டது, மற்றும் அங்கு வரும் விவாசிகளுக்கு க்ரிஷி ஜாக்ரன் சேவைகளை பரிந்துரைப்பதோடு, விவாசிகளின் துன்பங்களை கேட்டு அறிந்து கொண்டது. இந்த விழாவின் சிறப்பு என்னவென்றால், உத்ரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் ஆர்வமாக இந்த காளான் வணிகத்தை செய்து வருகின்றன, க்ரிஷி ஜாக்ரன் குழு அவர்களிடம் விவரமாக இந்த வணிகத்தை பற்றி பேசியது. அதில் இந்த வணிகத்தை எப்படி செய்வது, இயற்கை முறையில் செய்வது சாத்தியமா என்ற விவரம் பற்றிய தகவல்களும், அதில் எந்த வகையான உரம் செலுத்தப்படுகிறது, மற்றும் இதற்கு சரியான பருவம் எது, எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்ற இதுபோன்ற விரிவான தகவலை சேகரித்துள்ளது.
மேலும், காளான் வளர்ப்பு தொடர்புடைய தகவல்களை பெற tamil.krishijagran.com வலைத்தளத்தை பார்வையிடலாம் மற்றும் காளான் வளர்ப்பு தொரடர்புடைய முழு கட்டுரைகளை படிக்கலாம். மேலும் க்ரிஷி ஜாக்ரன் இன் முகநூல் பக்கத்தில் இந்த விழாவின் நேரலையை பார்க்கலாம்.
மேலும் படிக்க: