TAFE, வேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகவும் மற்றும் Massey Ferguson டிராக்டர்களின் உற்பத்தியாளராகவும் திகழும் TAFE (டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட் லிமிடெட்) – அதன் புதிய DYNATRACK டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய டிராக்டர், ஒரு மேம்பட்ட சிறந்த செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பம், ஒப்பீடற்ற பயன்பாடு மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே ஆற்றல் மிக்க டிராக்டராகத் திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TAFE-ன் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிரூபிக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவம், இந்திய விவசாயத்தைப் பற்றிய அதன் ஆழமான அறிவு மற்றும் புரிதல், வேளாண்மை மற்றும் இழுவை ஆகிய இரண்டு பணிகளுக்கு இடையிலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத இந்த பிரீமியம் ரக டிராக்டரை உருவாக்க உதவியுள்ளது.
DYNATRACK
புதிய DYNATRACK டிராக்டர்கள் தொகுப்பு, நல்ல மைலேஜ், ஆயுள் மற்றும் சொகுசினை உறுதி செய்யும் அதே நேரத்தில், அதிக உற்பத்தித்திறனையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. DYNATRACK-ன் DynaLIFT® ஹைட்ராலிக்ஸ் அமைப்பு, இப்புதிய டிராக்டரை அதன் பிரிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த லிப்ட் திறன், உற்பத்தித்திறன் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
VersaTECH™ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் டிராக்டரான, DYNATRACK ஒரு நீட்டிக்கக்கூடிய வீல்பேஸை வழங்குகிறது, இது ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகள், இழுவைப் பணிகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இதை மாற்றுகிறது. இது அதிகபட்ச தரை அனுமதி (Ground Clearence) வழங்குவதால், களிமண் தரை (Puddling) உட்பட்ட அனைத்து நிலப்பரப்புகளிலும் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கும், ஊடுசெல் பாதைகளை (Crossing of bunds) சுலபமாக கடப்பதற்கும் ஏற்றதாகத் திகழ்கிறது. இதன் நீண்ட வீல்பேஸ் மற்றும் ஸ்டைலான ஹெவி-டூட்டி முன் பம்பர் ஆகியவை டிராக்டரின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன மற்றும் லோடர்கள் மற்றும் சமன் எந்திரம் (Dozers) போன்ற கனரக உபகரணங்களைக் கையாளும் ஹெவி-டியூட்டி பணிகளுக்கு அதிக ஸ்திரத்தன்மையை அளிக்கிறது.
இந்த ‘மிகப்பெரிய ஆல் ரவுண்டர் டிராக்டர்’ (சப்ஸே படா ஆல் ரவுண்டர்), நிரூபிக்கப்பட்ட சிம்ப்சன் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறன் கொண்ட என்ஜின்களுக்கான சிறப்பம்சத்தின் அடையாளமாகும்.
DynaTRANS™ டிரான்ஸ்மிஷனுடன், டூயல் டயாபிராம் கிளட்ச், Super Shuttle™ தொழில்நுட்பத்துடன் கூடிய 24 Speed ComfiMesh® கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டிராக்டரை ஓட்டுபவருக்கு உகந்த கட்டமைப்பு, சிறந்த பணிச்சூழலியல் மற்றும் பயணத்தின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் சரியான வேகத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.
DYNATRACK தொகுப்பின் மேம்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான 4-in-1 Quadra PTO™, அனைத்து வழக்கமான மற்றும் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் டிராக்டரின் பல்வேறு திறமைகளையும் அதிகரிப்பதை, அதிக லாபம் ஈட்டத்தக்கதாக மாற்றுகிறது.
180,000 டிராக்டர்கள் என்னும் வருடாந்திர விற்பனைக் கொள்ளளவுடன், உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தியாளராகவும் மற்றும் எண்ணிகையின் அடிப்படையில் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் TAFE திகழ்கிறது. ரூ.100 பில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டிய இந்தியாவிலிருந்து டிராக்டர்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக TAFE திகழ்கிறது.
மேலும் படிக்க
மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்!
டெல்டா பாசனத்திற்காக கல்லணை ஜூன் 16-ல் திறப்பு!