மதுரை மாவட்டம் மேலுார் அரசு கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி, சீமைக் கருவேல மரங்களை எளிதாக அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். மேலூரை சேர்ந்த செந்தில் மகளான திவ்யதர்ஷினி, பி.எஸ்சி., தாவரவியல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் பள்ளி அறிவியல் கண்காட்சிகளில் பல கண்டுபிடிப்புகள் செய்து காண்பித்து பரிசுகளை வென்றுள்ளார்.
இயந்திரம் கண்டுபிடிப்பு (Inventing the Machine)
தற்போது சீமை கருவேல மரங்களை டிராக்டரில் ஹைட்ராலிக் கருவியை கொண்டு இலகுவான முறையில் அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். மாணவி கூறுகையில், ''இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அரைமணி நேரத்தில் ரூ.2 ஆயிரம் செலவில் அகற்றலாம்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு, விவசாயிகள் கேட்டுக் கொண்டால் செயல்படுத்த தயாராக உள்ளேன். அடுத்து காஸ் சிலிண்டருடன் ஆக்சிஜனை இணைத்து எரிவாயு அடுப்பை கண்டுபிடிக்க உள்ளேன்'' என்றார்
கல்லூரி மாணவியின் இந்த கண்டுபிடிப்பு, விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க