பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 June, 2021 11:47 AM IST

விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளையும் பொருட்களை  இடை தரகர்கள் இன்றி மலிவான விலையில் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி  அவர்கள் 1999 ஆம் ஆண்டு தொடக்கிவைத்த உழவர் சந்தை திட்டம் தற்போது வரை வெற்றிகரமாக செயல்படுகிறது.

எப்பொழுதும் வியாபாரிகள் இடைத் தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்று விவசாயிகளை விட அதிக லாபம் சம்பாரித்தனர். அதனால் ஏழைகளுக்கு காய்கறிகள் உணவு அரிதாகவே இருந்தது. மேலும் குழந்தைகளுக்கு சத்து குறைபாடுகளும்  பெண்களுக்கு ரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் அதிகம் காணப்பட்டது.

பின்பு 1999 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடங்கிய உழவர் சந்தை திட்டத்தினால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகள்,பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் புதிதாக திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 19 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலையை விட உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை மலிவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது வரை தமிழகத்தில் 180 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. உழவர் சந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 4 முதல் 10 ஊழியர்களுடைய கண்காணிப்பில் பெரிய வர்த்தமாகவே செயல்பட்டு வருகின்றன.

மேலும் விவசாயிகள் தங்களது விலை பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து வருவதற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், உழவர் சந்தை தொடங்கும் நேரத்தில் அதிகாலையில் உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையின் 4 இடங்களில் விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுகின்றன. இந்த விலைகளை நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் முடிவு செய்கிறது.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த உழவர் சந்தை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், மக்கள் விலைவாசி உயர்விலிருந்து தப்பிக்க முடியும் என மக்களவை, மாநிலங்களவையில் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உழவர் சந்தையின் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமுடியும் என்றும் இந்தியா முழுவதும் தமிழகத்தைப் போல் உழவர் சந்தைகள் துவக்கப்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க:

உழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே

விவசாயிகளுக்கு இலவச கோகோ செடி கன்று!

உழவர் கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

English Summary: Kalaignar’s Uzhavar Sandhai project set to go again
Published on: 22 June 2021, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now