அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான kcc கடன் உச்ச வரம்பு ரூ.4 அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2022-23ம் நிதியாண்டிற்கான பொது மட்ஜெட்டை,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே அதில் இருந்து, விவசாயிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கி, மக்களிடையே நற்பெயரைப் பெற மோடி அரசுத் திட்டமிட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு
எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடக்கூடும். விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, மோடி அரசு கிசான் கிரெடிட் கார்டின் வரம்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடன் கிடைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு 2022 பட்ஜெட்டில், வெளியிடப்படும் என விவசாயிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (KCC interest rate) கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி (Interest)
கிசான் கிரெடிட் கார்டில் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், விவசாயி கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.
பயிர் காப்பீடு
இது விவசாயிகளுக்கு மிக நல்ல திட்டமாகும். கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யலாம். ஏதாவது காரணத்தால், தங்களின் பயிர்கள் அழிந்துபோனால், அவர்கள் இதற்கான இழப்பீட்டைப் பெறலாம். வெள்ள காலத்தில், தண்ணீரில் மூழ்கிப் பயிர் நாசமானாலோ அல்லது வறட்சியின் போதும் பயிர் கருகிப்போனாலோ, கிசான் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க...
ரேஷன் கடைகளில் தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு!
வைட்டமின் நிறைந்திருக்கும் வண்ண காலிஃபிளவர், அதிக மகசூலும் தரும்!