நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து நாகை வேளாண் உதவி இயக்குநர் ச.லாரன்ஸ் பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறுவைத் தொகுப்பு திட்டம் (Curvature package project)
தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் விதைகளும், ரசாயன உரங்களும் வழங்கப்படுகின்றன.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நாகை வட்டார விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, சிட்டா அடங்கல் மற்றும் ஆதார் அட்டை நகல்களைப் பெற்று உழவன் செயலியில் தாங்களாகவே அல்லது நாகை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு (Contact)
மேலும் விவரங்களுக்கு 97159 62008 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவிப்பு (CM Announced)
2021ம் ஆண்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
2 ஏக்கர் விவசாயிகள் (2 acres farmers)
இத்திட்டம் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்துக் குறுவை சாகுபடி செய்யும் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விதைநெல், உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.
20கிலோ விதைநெல் (20 kg of paddy)
இந்தக் குறுவை தொகுப்பு திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விதை நெல் 20 கிலோ 50% மானிய விலையில் வழங்கப்படும். இதேபோல் ரூ1400 மதிப்புள்ள 20கிலோ பசுந்தாள் உர விதைகளும், ரூ.2185 மதிப்புள்ள உரங்களான யூரியா 2 மூட்டை, டி.ஏ.பி 1 மூட்டை மற்றும் பொட்டாஷ் அரை மூட்டையும் வழங்கப்படும்.
100% மானியத்தில் உரங்கள் (Fertilizers at 100% subsidy)
அரியலூர் மாவட்டத்திற்குக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விதை நெல் 40 மெட்ரிக் டன், 2600 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வாங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?