நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 March, 2024 10:43 AM IST
Mahindra Launches 6 RO Paddy Walker Transplanter

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மற்றும் உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் இன் பண்ணை உபகரணத் துறை, (FES) மஹிந்திரா 6RO நெல் வால்கர் என்ற ஒரு புதிய 6 வரிசை நெல் நடவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டினைப் பொறுத்த வரை நெற்பயிர் முதன்மையான வேளாண் பயிராக விளங்குகிறது. அரிசியின் தரம், வகைகள் மற்றும் உற்பத்தித் திறன்கள் மற்றும் அரிசி இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

6 வரிசை நடவு இயந்திரம்:

நெல் நடவு செய்வதில் புதிய தரநிலைகளை அமைத்து, மஹிந்திராவின் புதிய மேம்பட்ட நெல் நடவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே சமயம் ஆறு வரிசைகளில் ஒரே நேரத்தில் துல்லியமான மற்றும் திறமையான நடவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடவு செய்கின்ற வயலில் ஒரே மாதிரியாக நடவு செய்வதை உறுதிசெய்கின்ற மஹிந்திரா, 6RO பேடி வாக்கர் கைமுறையாக இயக்கப்படுகிறது,

வடிவமைப்பில் கச்சிதமானது மற்றும் இடுக்கமான இடங்களில் கூட கையாள எளிதானது, மற்றபடி உழைப்பு மிகுந்த செயல்முறையில் ஒப்பிடுகையில் தொழிலாளர் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது.

எஞ்சின் தரம் எப்படி?

ஆற்றல், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் ஒரு கவனம் செலுத்தும் வகையில், இந்த புதிய நெல் நடவு இயந்திரம் ஒரு அதிக நீடித்துழைக்கும் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சினைக் கொண்டுள்ளது. அதிக உற்பத்தி மற்றும் குறைந்த எரிபொருள் நுகர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு நெல் சாகுபடியில் உற்பத்தித்திறனை அதிகப்படுத்துகிறது. அத்துடன் நீட்டிக்கப்பட்ட சேவை இடைவெளிகளையும் கொண்டுள்ளது. இந்த புதிய தீர்வு, பயிர்களின் ஒட்டுமொத்த லாபத்தை மேம்படுத்தும் அதே வேளையில் நீர் பாதுகாப்பு நெல் சாகுபடி தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் குறைக்கும்.

இயந்திரத்தை வாங்க சிறப்பு சலுகை:

இந்த புதிய மஹிந்திரா 6RO பேடி வாக்கர், மஹிந்திராவின் தமிழ்நாட்டில் உள்ள விரிவான டீலர் நெட்வொர்க் மூலம் ஒரு குறுகிய கால சிறப்பு சலுகை விலையான ₹2,49,999 கிடைக்கும். இந்த புதிய மஹிந்திரா 6RO பேடி வாக்கர், மஹிந்திரா ஃபைனான்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து வகையில் சிறந்த நிதி வழங்கல் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

மஹிந்திரா பேடி வாக்கர் 6RO இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

உயர் சரி நுட்ப துல்லியமான நடவு: நிலையான நாற்று நடவு பொறிமுறை: சரிசெய்யக்கூடிய நடவு இடைவெளி மூலமாக மிதக்கும் நாற்றுகள் மற்றும் தவறான நடவுகளைத் தடுக்கிறது,

நிலையான விதைப்பு தீவனம்: சரியான நாற்று ஊட்டத்தை உறுதி செய்வதற்காக ரப்பர் கூர்முனைகளைக் கொண்டுள்ளது.

Read also: அகவிலைப்படி 4 % உயர்வு- அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப் போகும் மாற்றம்!

கிடைமட்ட கட்டுப்பாடு: சீரற்ற வயல் பரப்புகளில் கூட நிலையான நடவு ஆழத்தை பராமரிக்கிறது.

பெரிய விட்டம் கொண்ட சக்கரம்: வயல் செயல்பாடுகள் மற்றும் சூழ்ச்சித்திறன் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மேம்படுத்துகிறது.

அதிக நீடித்துழைக்கும் கியர்பாக்ஸ்: தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான ஒரு உறுதிப்பாட்டுடன் இந்த  புதிய மஹிந்திரா பேடி வாக்கர் 6RO, ஒரு உயர்தரமான  மற்றும் நீடித்துழைக்கும் கியர்பாக்ஸைப் பயன்படுத்துகிறது, இது நீடித்த செயல்திறனுக்காக நீர்ப்புகாதது  ஆகும்.

ஹை  அவுட்புட் OHV பெட்ரோல் நம்பகமான எஞ்சின்: இலகுரக, கச்சிதமான, குறைந்த சத்தம், அதிர்வு மற்றும் எரிபொருள் திறன் கொண்ட, இந்த புதிய மஹிந்திரா பேடி வாக்கர் 6RO ஆனது  நீண்ட மணி நேரங்கள்  செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரிய ஃப்யூயல் டேங்க் : திறமையான மற்றும் தொடர்ச்சியான பணிக்காக, இந்த புதிய நெல் நாற்று நடும் இயந்திரத்தில் நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா சேவை: அனுபவம் வாய்ந்த மஹிந்திரா சேவை பணியாளர்கள் மூலம் மஹிந்திரா டீலர்களில் தரமான சேவைகள்.

அசல் உதிரிபாகங்கள்: அனைத்து மஹிந்திரா டீலர்ஷிப்களும் அசல் மஹிந்திரா உதிரிபாகங்கள் கிடைக்கின்றன.

மஹிந்திரா குழுமம் இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் முன்னணியில் விளங்குவதோடு உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்

பட்டுப் புழு வளர்ப்பு- 3 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியம்! முழு விவரம்

English Summary: Mahindra Launches 6RO Paddy Walker Transplanter in Tamil Nadu and given special offer price
Published on: 13 March 2024, 10:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now