பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி பிப்ரவரி 2023 மாத இலவச பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் வருகிற 23 பிப்ரவரி 2023 அன்று தேங்காய் ஓட்டியிலிருந்து கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, இலவசமாக அளிக்கப்படும். முன்பதிவு செய்ய 9488575716 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஆளில்லா விமானம் மூலம் பூச்சி மேலாண்மை குறித்த செயல் விளக்கம்
நெல் விவசாயத்தை இயந்திரமயமாக்கல் மற்றும் கற்று விவசாயத்தை ஒருங்கிணைப்பதற்கான திட்டம், வேளாண் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் ஓர்லிகான் ஃபிரிக்ஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் சார்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், கித்திரிப்பேட்டை நெய்க்குப்பம் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் பூச்சி மேலாண்மை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன்3 திறப்பு - திறந்துவைப்பார் முதல்வர் ஸ்டாலின்
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் முழுக்க முழுக்க ஆராய்ச்சி மாணவர்களுக்காக உருவாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், வரும் ஜூன் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி
ட்ரோன் மூலம் பென்சன் டெலிவரி செய்த அரசு குவியும் பாராட்டு
ஒடிசாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் உள்ள ஊனமுற்ற பயனாளிக்கு ஓய்வூதியத்தை விநியோகிக்க ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த புதுமையான நடவடிக்கை பரவலாக பாராட்டப்பட்டது. ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஹெட்ராம் சட்னாமி, ஒவ்வொரு மாதமும் தனது அரசாங்க ஓய்வூதியத்தைப் பெறுகிறார். அடர்ந்த காடு வழியாக 2 கி.மீ. நடக்க வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை புரிந்துக்கொண்ட அரசு அவருக்கு உதவும் விதமாக, பாலேஷ்வர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூதகபாடா கிராமத்தில் உள்ள சட்னாமிக்கு ட்ரோன் மூலம் அவரது வீட்டிற்கே பணம் டெலிவரி செய்யப்பட்டது.
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு
2022-23க்கான விவசாயத்திற்கான தேசிய மாநாடு மற்றும் கோடைக்கால பிரச்சாரம் குறித்து பிப்ரவரி 20, 2023 அன்று கிருஷி பவனில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வரும் கோடைக்காலத்திற்கு தேவையான ஆயத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நிதி ஆயோக்க்கின் புதிய CEO வாக பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம்
நிதி ஆயோக் புதிய CEOவாக பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். இதை அடுத்து நிதிஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க:
வேளாண் மாணவிகள் பஞ்சகவ்யா, சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை