Farm Info

Friday, 21 May 2021 08:26 AM , by: Daisy Rose Mary

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு

இது குறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கொரானாவினால் ஏற்பட்ட 2வது அலை தாக்குதலை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் கீழக்கண்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விளைபொருட்களை பாதுகாத்து சேமித்திட கிடங்குவசதி மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்புகிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள்வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம்.

பொருளீட்டுக்கடன் வசதி

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விவசாயிகள் அடமானத்தில் பேரில் அதிகபட்சம் 75 சத சந்தை மதிப்பு அல்லது ரூபாய் 3 இலட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனாக பெற்றிடலாம். கடனிற்கான காலஅளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதமாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாத்திட குளிர்சாதனக் கிடங்கு வசதி

பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்சாதனக்கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருட்களை இக்கிடங்குகளில் வைத்து பாதுகாத்திடலாம்.

மேலும் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இதனை பயன்படுத்தி விளைபொருட்களை பாதுகாத்திடலாம்.

விவசாயிகள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் கீழ்க்கண்ட தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.
044 22253884

மாவட்ட அளவில் விளைபொருட்களை விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவைக்கு வேளாண்மை விற்பனைத் துறையின் விற்பனை குழு செயலர் / வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம். தொலைபேசி எண் கீழே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கால்நடைகளுக்குத் தீவனமாகும் தங்கரளி இலைகளில் விஷத்தன்மை - இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை!

பொங்கல் கரும்பு உற்பத்திக்கு, விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணி தீவிரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)